சென்னை மெட்ரோ ரயில் லாபத்தில் இயங்க முடியாது என, இந்தியாவின் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஹிந்துஸ்தான் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீதரனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதரன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் லாபத்தை ஈட்ட முடியாது என்று தெரிவித்தார். மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கான முதலீடு அதிக அளவில் இருப்பதாலும், டிக்கெட் விலையை குறைவாக நிர்ணயித்திருப்பதாலும் லாபம் ஈட்டுவது இயலாத காரியம் என்று அவர் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயிலை பொருத்தவரை, ரயில் சேவை ஆரம்பித்து குறுகிய காலம் ஆவதால், நிர்வாக செலவுகளை மேற்கொள்ளும் அளவிற்கு கூட லாபம் ஈட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இது சென்னை மெட்ரோவிற்கு மட்டும் அல்லாமல் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்றும் ஸ்ரீதரன் கூறினார்.
Discussion about this post