கர்நாடகாவில் மைனாரிட்டி குமாரசாமி அரசு இந்த நிதியாண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் மோதல் நீடிப்பதால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில், இன்று காலை அவை கூடியதும், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பாஜக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர். தொடர் அமளி காரணமாக சட்டப் பேரவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
Discussion about this post