லண்டனில், பினாமி பெயரில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா அமலாக்கத்துறை முன்பு இன்று நேரில் ஆஜரானார். கடந்த ஆண்டு ,ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்த சஞ்சய் பண்டாரி என்பவருக்கு சொந்தமான, 18 இடங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதில் சஞ்சய், பண்டாரிக்கும்,ராபர்ட் வத்ராவுக்கும் உள்ள ரகசிய தொடர்பு குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ராபர்ட் வத்ரா, 2009 ம் ஆண்டு, லண்டனில்,19 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் ஒன்றை, பினாமி பெயரில் வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வத்ரா நேரில் ஆஜரானார்.இதையடுத்து இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
Discussion about this post