சமீபத்தில் வெளியான “பேரன்பு ” திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நடிகர் மம்முட்டி தனது அடுத்தப்பட ரிலீசுக்கு தயாராகி விட்டார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ” யாத்ரா” படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப்படம் தான் இந்த யாத்ரா திரைப்படம். இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.
இந்தப் படம் அமெரிக்காவிலும் வெளியாகிறது. அங்கு யாத்ரா படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டை இந்திய மதிப்பில் ரூ.4.37 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முனீஸ்வரர் என்ற நபர். இந்த செயல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முனீஸ்வரர் நடிகர் மம்முட்டிக்கு ரசிகர் அல்ல. மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தீவிர விசுவாசி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மூரில் முன்னணி நடிகர்களின் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் பணத்தை தண்ணியாக செலவழிப்பார்கள். ஆனாலும் இவ்வளவு லட்சம் என்பது ரொம்ப டூ மச் தான்……!
Discussion about this post