திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிடங்கில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்புடைய காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீஞ்சூர், பொன்னேரி, காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரம் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகளிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், நல்லூர் ஏரி கரை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கிடங்கின் உரிமையாளர் ராகுல் சஞ்சய் என்பவரை தேடி வருகின்றனர்.
Discussion about this post