தஞ்சையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சையில் உள்ள வணிக நிறுவனங்கள் கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியின் குடவுனில் சோதனை மேற்கொண்ட போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
Discussion about this post