அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் பயணித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யோப்ர லிண்டா நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post