மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக மேற்கு வங்கம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆங்காங்கே மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மறியலிலும் ஈடுபடுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. குறிப்பாக ஹவ்ரா, ஹூங்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் உருவ பொம்மைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Discussion about this post