திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே கஸ்தூரி மஞ்சள் சாமந்தி செடிகளில் நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தண்டராம்பட்டை அடுத்த கொளக்குடி, பவித்திரம், அரடாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கஸ்தூரி மஞ்சள், சாமந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பருவமழை பொய்த்து போனதால், குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளை அசம்பூம், சரவூ நோய் தாக்கியுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை மருந்து அடித்தாலும், எந்த பயனும் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஒருகிலோ சாமந்தி பூ 25 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
Discussion about this post