சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள் , 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையின் வணிகப் பகுதியான தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஐவுளிகடை மற்றும் அனைத்து கடைகளிலும் மாநகராட்சி அதிகாரிகள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.
மாநகராட்சி 10வது மண்டலத்தின் உதவி ஆணையர் நடராஜன் தலைமையில், 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில், சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post