மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் எந்த அம்சமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை மனதில் வைத்து கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது என்றும் தேர்தல் அறிக்கை போல் உள்ளது என்றும் விமர்சித்தார். தனிநபர் வருமான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாய் என்ற அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் வகையில் போலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post