மகாராஷ்டிரா கடற்பகுதியில் தத்தளித்த தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிப்பதற்காக படகில் புறப்பட்டுள்ளனர். எஞ்சின் கோளாறு காரணமாக படகு திசைமாறி, மகாராஷ்டிரா கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா பகுதியில் படகு தத்தளித்து வந்த நிலையில், இது தொடர்பாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. பின்னர், கடலோர காவல் படையின் விமானம் மற்றும் கப்பல் உதவியுடன் 13 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
Discussion about this post