மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஒரு ரூபாய் 46 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது எரிபொருளின் விலையையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ஒரு ரூபாய் 46 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதே போல் மானியம் இல்லாத சிலிண்டர் விலையும் 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி 14புள்ளி 2 கிலோ மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை, 674 ரூபாய் 85 காசுகள் ஆகவும், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை 481 ரூபாய் 42 காசுகள் ஆகவும் குறைந்து உள்ளது.
Discussion about this post