கடந்த 150 ஆண்டுகளாக, தோல் மற்றும் தோல் பொருட்களை தமிழகம் உற்பத்தி செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கூறியுள்ளார். 34-வது தோல் பொருள் கண்காட்சியின் துவக்க விழா, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், தோல் மற்றும் தோல் பொருட்கள், காலணிகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பிரேசில், சீனா, ஜெர்மனி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த அரங்குகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தோல் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதும், தோல் பதனிடுவதும் முக்கிய தொழிலாக இருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டுக்கு தேவையான தோல்களையும், தோல் பொருட்களையும் கடந்த 150 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வழங்கி வருவதாக அவர் கூறினார்.
இந்த கண்காட்சி ஆசியாவிலேயே மிகப் பெரிய கண்காட்சியாக அமைந்துள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Discussion about this post