மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 665.44 புள்ளிகள் உயர்வடைந்து, 36 ஆயிரத்து 256.69 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 665.44 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 256.69 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 179.15 புள்ளிகள் உயர்ந்து, 10 ஆயிரத்து 830.95 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதில் சென்செக்ஸில் குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார், இன்போஸிஸ் , இண்டஸ்லேண்ட் வங்கி, கோட்டக் மஹிந்திரா ஆகியவை நல்ல வளர்ச்சியைக் கண்டு ஆதாயத்துடன் முடிவடைந்துள்ளன. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் ஆட்டோ, வங்கி, எனர்ஜி, ஆகியவை நல்ல வளர்ச்சியுடன் முடிவடைந்ததன.
Discussion about this post