பல்வேறு தடைகளை கடந்து விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோரக்கோட்டை மலையில் வெட்டியெடுக்கப்பட்டு, முகம் மட்டும் வடிவமைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை, பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு இடங்களில் வாகனம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, சில இடங்களில் பாதைகளை அகலப்படுத்தி சிலை கொண்டு கடந்து சென்றது.
தற்போது கோதண்டராமர் சிலை, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை எட்டியுள்ளது. இந்நிலையில், விரைவில் பெங்களூரு ஈஜிபுரா பகுதிக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலையை கண்ட, கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன், கோதண்ட ராமரை வழிபட்டனர்.
Discussion about this post