கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் நல திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் நின்றதற்கு காரணம் திமுக தான் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சிக்கு வராது என்பதால் தான் ஸ்டாலின் கூறுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்,
Discussion about this post