சாதாரண சந்திப்பை ராகுல் காந்தி அரசியலாக்கி விட்டதாக கூறிய கோவா முதலமைச்சரின் கருத்துக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை கடந்த செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து, கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, புதிய ரஃபேல் ஒப்பந்தத்தில் எனது பங்களிப்பு எதுவும் இல்லை. அனில் அம்பானிக்கு உதவுவதற்கு பிரதமர் மோடி தான் அதை செயல்படுத்தினார் என்று கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்திக்கு மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதினார். அதில் 5 நிமிட சந்திப்பில் ரபேல் குறித்து இருவரும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். அந்த சந்திப்பு முற்றிலும் உங்களுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையிலான மரியாதைக்குரியது என்று ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மனோகர் பாரிக்கர் அழுத்தம் காரணமாக தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Discussion about this post