சஞ்சாரம் நாவலுக்காக பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருதினை பெற்றார்.
சாகித்ய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அதன்படி, கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது. நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை இந்த நாவல் விளக்குகிறது.
இந்தநிலையில், டெல்லியில் சாகித்ய அகாடமி விருது வழங்கும் நடைபெற்றது. சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருதினை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, பட்டயம் வழங்கி அவர் சிறப்பிக்கப்பட்டார்.
Discussion about this post