நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 2 வது இடத்தில் நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், 3 புள்ளிகள் அதிகரித்து 124 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து 2 வது இடத்தில் நீடிக்கிறது. 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிடம் தொடரை இழந்த நியூஸிலாந்து அணி 3 புள்ளிகளை இழந்து 110 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் நீடிக்கிறது. 102 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 4 வது இடத்திலும், பாகிஸ்தான் 5 வது இடத்திலும் உள்ளன.
Discussion about this post