புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு உள்ளதாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி முகாம் சாரம் பகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு உள்ளதாகவும், பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை காணப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். புதுச்சேரியில் 85 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, வட மாநிலங்களில் பெண்களுக்கு தனி சுதந்திரம் இல்லாத நிலை உள்ளதாகவும், அங்கு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Discussion about this post