மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், நாளை மறுநாள் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சகோதரர் கலாநிதி மாறனின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 700க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மனுவின் அடிப்படையில் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கு, நீதிபதி ஆர்.வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். நாளை இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
Discussion about this post