பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்க, சட்டம் கொண்டுவரப்பட்டது.மத்திய அரசின் 330 பொதுத்துறை நிறுவனங்களில் இந்த சட்டம், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதை உறுதிசெய்து, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Discussion about this post