தஞ்சையில் 1600 மாணவ, மாணவிகள் ஓன்றுகூடி கிராமிய நடனத்தை ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.
குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், உலக அளவில் சாதனை முயற்சியாகவும், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 1600 மாணவர்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஒரே போல் உடையணிந்து நாட்டுபுற பாடல்களுக்கு ஒன்றாக 15 நிமிடம் நாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சிக்கு நடுவராக universal record forum மற்றும் guinness world record holder டாக்டர் சுனில் ஜோசப் கலந்து கொண்டு உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகியும் நாட்டுப்புற இசைக்கலைஞருமான சின்னப்பொன்னு, திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post