இனவெறியை தூண்டியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது தென்ஆப்பிரிக்கா வீரர் பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. உருது மொழியில் பேசிய சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சர்ஃப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த ஐசிசி, அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post