தமிழக அரசு, கட்டிடம் கட்டுவதற்கு எம் சாண்ட் (M Sand) அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கட்டிடக்கலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், குறுந்தொழில்கள் சங்கம் மற்றும் பில்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா இணைந்து, கட்டுமான துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்தும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை விளக்கும் வகையிலும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டிடத் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை பாளையங்கோட்டை காவல் துறை உதவி ஆணையாளர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு, கட்டிடம் கட்டுவதற்கு எம் சாண்ட் மணல் அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கட்டிடக்கலை நிபுணர் சொக்கநாதன் கூறினார்.
Discussion about this post