கொடைக்கானலில் நிலவும் பனிப்பொழிவால் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனி படர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது.மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கடும் உறைபனி நிலவி வருகிறது. இங்குள்ள கோக்கர்ஸ் வாக் பகுதியில் அமைந்துள்ள மலைமுகடுகளை பனி மூட்டம் முற்றிலும் மறைத்து அற்புதமாக காட்சி அளிக்கிறது. ஜிம்கானா சாலை, நட்சத்திர ஏரி, பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கொட்டிய பனி காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. படிப் படியாக உறைபனி குறைந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பாயணிகள் தீ மூட்டி குளிர் காயும் நிலையியை காண முடிகிறது.
Discussion about this post