நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட 5 குளோனிங் குரங்குகளை சீனா உருவாக்கியுள்ளது.
அல்சீமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு ஆய்வுக்காக எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தநிலையில் மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்கு குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
Discussion about this post