கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 14 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று மலைவாழ் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த மஞ்சம்பட்டி, உலுவக்காடு மற்றும் மூங்கில் பள்ளம் ஆகிய மலைப்பகுதிகளில் பழங்குடியினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு செயல்படுத்துகின்ற அனைத்து திட்டங்களும், சென்றடையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆகியவற்றை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Discussion about this post