தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். இந்தநிலையில் பழனிக்கு ஏராளமான நகரத்தார் காவடி எடுத்து வந்தனர்.
காவடியுடன் இரட்டை மாட்டு வண்டியில் வைரவேல் கொண்டு வரப்பட்டது. பின்னர் தெற்கு ரதவீதியில் உள்ள நகரத்தார் மடத்தில் இருந்து ஏராளமானோர் காவடிகள் ஒரே நேரத்தில் கிளம்பி கடை வீதி, சன்னதி வீதி வழியாக மலைக்கோயிலுக்கு படிவழியாக சென்றது.இதையடுத்து மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
Discussion about this post