வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 21 நாளில் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிமாற்றம் மேற்கொண்டு, இதுவரை 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை மூலம் எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 21 நாள்களில் அவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் (1961) படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோர் ஆன்லைன் மூலம் விளக்கம் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post