கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் இருபதாம் நுற்றாண்டின் தொடக்கத்தில் கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தை எழுப்பினார். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1975 ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதால், அன்று முதல் இலங்கை அதிகாரிகள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனையொட்டி, இந்த ஆண்டு திருவிழாவிற்கான கடல் போக்குவரத்து, உணவு, தங்கும் இடம், சுகாதாரம், படகு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து இலங்கையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Discussion about this post