காஷ்மீரில் கார்கில் உள்ளிட்ட சில இடங்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குப்வாராவில் மைனஸ் பூஜியம் புள்ளி 6 டிகிரி செல்சியசும், குல்மார்க்கில் மைனஸ் 4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவுகிறது. லேவில் மைனஸ் 5 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக கார்கிலில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் பருவநிலையும் நிலவுகிறது.
மைனஸ் டிகிரிக்கு வெப்பம் சென்றாலே தண்ணீர் பனிக்கட்டியாக மாறிவிடும் என்பதால், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. ரம்பன் பகுதியில் சாலைகள் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post