இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தனது குடும்பத்தினரோடு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
Discussion about this post