மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் செவஸ்டோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசக்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4 ஆம் சுற்றுப் போட்டியில் தர வரிசையில் 4 ஆம் நிலை வீராங்கனையும், ஜப்பானை சேர்ந்தவருமான நவோமி ஒசக்கா 13 நிலை வீராங்கனையான லாத்வியாவை சேர்ந்த செவஸ்டோவாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில், முதல் செட்டை 4 க்கு 6 என்ற கணக்கில் பறிகொடுத்த ஒசக்கா பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 க்கு 3, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், தர வரிசையில் 6 ஆம் இடத்தில் இருப்பவரும் உக்ரைனை சேர்ந்த பிரபல வீராங்கனையுமான எலினா ஸ்விடோலினா அமெரிக்காவின் மடிசன் கீஸை எதிர்கொண்டார். சிறப்பாக ஆடி 6க்கு 2, 1க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் மடிசன் கீஸை வீழ்த்திய ஸ்விடோலினா 4 சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
Discussion about this post