வடலூர் சத்தியஞான சபையில் வள்ளலார் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலூர் மாவட்டம், வடலூரில் 148-வது தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடிய பின்னர், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது.
தைப்பூச திருவிழாவின்போது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
Discussion about this post