பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் 2ஆம் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் 12 நாட்களில் 4 அடி சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையிலிருந்து 2ஆம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2ஆம் போக பாசனத்திற்காக விநாடிக்கு 2300 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 400 கனஅடி வீதமும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 400 கனஅடி வீதம், குடிநீர் தேவைக்கு 100 கனஅடி என மொத்தம் 3200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளதால் கடந்த 12 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி சரிந்துள்ளது.
Discussion about this post