மதுரையில் அமைக்கப்பட உள்ள அதிநவீன பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரை மேம்படுத்த தமிழக அரசு முடிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர் பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அதிநவீன பேருந்து நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 4 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post