ராணுவ காவல் துறை பிரிவில் காலியாக உள்ள இடங்களில் 20 சதவிகித பெண்களை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார். இராணுவ காவல் துறை பிரிவில், தங்கள் பிரதிநிதித்துவத்தை அதகரிப்பதற்கான நோக்கத்துடன் பெண்களை ஈடுபடுத்தும் ஒரு வரலாற்று முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இராணுவ காவல் துறை பிரிவில் காலியாக உள்ள இடங்களில் 20 சதவிகித பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு ஒரு தனித்துவமான பங்கை வழங்குவதற்கான செயல்முறை தற்போது வேகமாக நடைபெற்று வருவதாகவும், ராணுவ காவல் நிலையங்களில் பெண்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.
Discussion about this post