தமிழகத்தில் வரும் 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 31 ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் 21 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிழைகளற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. அதன் படி இரட்டை பதிவுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தவறுகளை நீக்கி புதிய மென்பொருளில் அச்சிட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்ப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post