மத்திய பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்னெடுத்து வருகிறார். இதற்கென பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அனைத்து தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் சக்தியாக பிராந்திய கட்சிகளே திகழும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த பிரமாண்டக் கூட்டத்தில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. சாராத அனைத்து கட்சிகளும் கலந்து கொள்கின்றன.
Discussion about this post