கஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனி பொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகர் சாலைகளில் பனி படர்ந்திருப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர். இந்தநிலையில் பகல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கும் சுற்றுலா பயணிகள், சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிகளை எடுத்து ஒருவொருக்கொருவர் மீது வீசி விளையாடி மகிழ்ந்தனர்.
இதேபோல், தலைநகர் டெல்லியிலும் கடும் மூடுபனி நிலவி வருகிறது. விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. 10 ரயில்களின் தாமதமாக இயக்கப்பட்டன. சாலையில் எதிரே வரும் வாகனம் தென்படாத வண்ணம் பனி அடர்ந்து காணப்படுகிறது. வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன.
கடும் குளிர் காரணமாக, இரு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர். பல இடங்கள் வெறிச்சோடி உள்ளது. அடுத்த வரும் நாட்களிலும் கடும் குளிரானது இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் மூடுபனி அதிகமாக நிலவியது.
Discussion about this post