காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு கொடிவேரி அணையில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் அருகே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே காணும்பொங்கலை ஒட்டி, பவானி ஆற்றில் நீராடுவதற்காக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் குவிந்தனர்.
எனவே, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அப்பகுதியில் படகுசவாரி செய்யவும், உணவுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
Discussion about this post