வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளும் முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்த 63 நாட்களுக்கு பிறகே ரீஃபண்டுக்கான தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்து வந்தது. இனி ரீஃபண்ட் தொகை 24 மணி நேரத்தில் கிடைக்கும் வகையிலான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான மென்பொருளை உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மென்பொருளை 4 ஆயிரத்து 242 கோடி ரூபாய் செலவில் இன்போசிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 18 மாதங்களில் வடிவமைக்கப்படும் இந்த மென்பொருள், 3 மாத சோதனை முயற்சிக்கு பின்னர், அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றார்.
Discussion about this post