தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைத்திங்கள் மூன்றாம் நாளான இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று கோயில்கள், சுற்றுலா தளங்கள், உறவினர்கள் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் சென்று அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கழிப்பார்கள்.
மேலும், பல்வேறு ஊர்களில் வீர விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சென்னையை பொருத்தவரை, காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post