கர்நாடகாவில், முதலமைச்சர் குமாரசாமி ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு, பா.ஜ.க. சதி செய்வதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குமாராசாமி அரசு முயற்சிப்பதாக பா.ஜ.க.வும் பதிலுக்கு தெரிவித்து வருகிறது. இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் ஆதரவை திரும்பப் பெற்றதால் குமாரசாமி ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் வராது என்று மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். யார் என்ன செய்தாலும், ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் ஆட்சி தொடரும் என்றார்.
Discussion about this post