பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இருப்பை உறுதிச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை இன்று முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. வங்கி விடுமுறை காரணமாக ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் இல்லாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக அனைத்து வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களிலும் பணம் இருப்பதை உறுதிச் செய்ய பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏ.டி.எம். இயந்திரங்களில் முழுமையாக பணம் நிரப்பப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post