மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். இவ்விழாவில் பிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கயிறு இழுத்தல், மியூசிக் சேர், உறியடித்தல் போன்ற நிகழச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். கிராமிய நடனங்களில் வெளிநாட்டினர் கலந்து நடனம் ஆடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
Discussion about this post