முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் மெஜாரிட்டியாக இருக்கும் மாநிலங்களவையில் மசோதாவிற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் மாநிலளங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post