மணிமுத்தாறு அருவியில், நீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, அருவியில் நீர் வரத்து குறைவாக இருப்பதால், 19 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், மணிமுத்தாறு பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Discussion about this post